You tube

வியாழன், 15 பிப்ரவரி, 2018

காவிரி நதி நீர்ப்பகிர்வு

டந்து வந்த பாதையை பார்க்கலாம்: 1892ல் சென்னை மாகாணம் - மைசூர் சமஸ்தானம் இடையே காவிரி நதி நீர்ப்பகிர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது 1924ல் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் அணைகளை அடிப்படையாக வைத்து 50 ஆண்டு கால உடன்படிக்கை போடப்பட்டது

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும், 1924 ஒப்பந்தபடியே காவிரி நீர்ப்பகிர்வு நடந்து வந்தது 

1956ல் மொழிவாரி மாநில மறுசீரமைப்பால் குடகு கர்நாடகத்தின் பகுதி ஆனது

 கபினியின் பிறப்பிடம் மொழிவழிக் கேரளாவில் அமைந்திருந்தது என்பதால் புதிதாக காவிரி நீரில் கேரளாவும், புதுச்சேரியும் பங்கு கேட்டன 
1974ல் ஆண்டில் 50 ஆண்டுகால காவிரி நீர்ப் பகிர்வு ஒப்பந்தம் நிறைவடைந்தது; 
1986ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியது தமிழக அரசு 1990 ஜூன் 2ல் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு காவிரி நடுவர் மன்றம் அமைத்தது. நடுவர் மன்றத்தில் கர்நாடகா-465;
 தமிழகம்- 566; கேரளா- 99.8; புதுச்சேரி- 9.3 டி.எம்.சி. தண்ணீர் கேட்டன 1991, ஜூன் 25ம் தேதி, காவிரி நடுவர்மன்றம், இடைக்காலத் தீர்ப்பை அளித்தது 1991, டிசம்பர் 11ல் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டபோது கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக பெரும் கலவரம் நடத்தப்பட்டது. உள்நாட்டிலேயே தமிழர்கள் அகதிகளாக அடித்து விரட்டப்பட்டனர். தமிழகத்திற்கு ஆண்டுக்கு 419 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என 2007 ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பை ஏற்க மறுத்த கர்நாடகா, தமிழகத்திற்கு 192 டிஎம்சி மட்டுமே திறந்து விட முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தது 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த ஜனவரி 9 ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது காவிரி வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்வராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பளிக்க உள்ளது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Ads Inside Post