TNPSC || TN Text Books || 8th Text Book || Pallikalvi
8th Text Book
8th Text Book
1.வாழ்த்து
· ‘முத்தே பவளமே’ எனத்துவங்கும் பாடலை இயற்றியவர் – தாயுமானவர்
· ‘பராபரம்’ என்பதன் பொருள் – மேலான பொருள் , இறைவன்
· தாயுமானவரின் பெற்றோர் – கேடிலியப்பர் , கெசவல்லி அம்மை
· ஊர் – வேதாரண்யம் (திருமறைக்காடு)
· தாயுமானவர் , திருச்சி விசயரங்க சொக்கநாதரிடம் கருவூல அதிகாரியை வேலை பார்த்தார் .
· ‘தமிழ்மொழியின் உபநிடதங்கள்’ எனப்படுபவை – தாயுமானவர் பாடல்கள்
· தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள இடம் – லட்சுமிபுரம் (ராமநாதபுரம்)
· தாயுமானவர் காலம் – 18 ம் நூற்றாண்டு
1.திருக்குறள்
· காப்பு – காவல்
· நீரவர் – அறிவுடையவர்
· கேண்மை – நட்பு
· பேதையர் – அறிவிலார்
· நவில்தோறும் – கற்க கற்க
· நயம் – இன்பம்
· நகுதல் – சிசித்தல்
· இடித்தல் – கடிந்துகொள்ளுதல்
· கிழமை – உரிமை
· முகந்த – முகம் மலர
· அகம் – உள்ளம்
· ஆறு – நல்வழி
· உய்த்து – செலுத்தி
· அல்லல் – துன்பம்
· உடுக்கை – ஆடை
· இடுக்கண் – துன்பம்
· கொட்பின்றி – வேறுபாடின்றி
· ஊன்றும் – தாங்கும்
· புனைதல் – புகழ்தல்
· ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து’ எனப்பாடியவர் – பாரதி
· ‘வள்ளுவனைப்பெற்றதால் பெற்றதே’ எனப்பாடியவர் – பாரதிதாசன் .
· திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் – வீரமாமுனிவர்
· பேதையர் நட்பு – தேய்பிறை போன்றது
· பண்புடையார் தொடர்பு – நவில்தோறும் நூல்நுயம் போன்றது
· அறிவுடையார் நட்ப – வளர்பிறை போன்றது .
3 . G.U . போப்
· பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவில் , 1820 – ல் ஜீ.யூ.போப் பிறந்தார் .
· பெற்றோர் – ஜான் போப் , கேதரின்
· முதலில் சென்னை சாந்தோமிலும் , பின் திருநெல்வேலி சாயர்புத்திலும் (7 ஆண்டுகள் , 1842 - 49) வாழ்ந்தார் .
· பின் தஞ்சாவூரில் பணியாற்றினார் . அங்கிருக்கும்போதுதான் புறநானூறு , நன்னூல் , திருக்குறள் , திருவாசகம் போன்றவற்றை பயின்றார் .
· இவர் மொழிபெயர்த்த நூல்கள் – திருக்குறள் , திருவாசகம் , நாலடியார் .
· ஜி.யூ போப் தமிழ்மொழி மீதான ஆய்வுக்கட்டுரைகளை எழுதிய இதழ்கள் - இந்திய சஞ்சிகை , இந்திய தொல்பொருள் ஆய்வு .
· தமிழ்ச்செய்யுள்ள கலம்பகத்தைத்தொகுத்தவர் – ஜீ.யூ.போப் (600 பாடல்கள் )
· உதகமண்டலத்தில் 1858 ல் பள்ளி துவங்கி ஆசிரியராய் பணியாற்றினார் .
· 1885 முதல் 1908 வரை , 23 வருடங்கள் தமிழ் , தெலுங்கு ஆசிரியராய் இங்கிலாந்தில் பணிபுரிந்தார் .
· திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்ட வருடம் – 1886
· 1900 – ல் திருவாசகத்தை , ஜீ.யு.போப் மொழிபெயர்க்கும் போது அவருடைய வயது 86 .
· இவர் பதிப்பித்த தமிழ்நூல்கள் – புறப்பொருள் வெண்பாமாலை , புறநானூறு , திருவருட்பயன் .
· இவர் இறந்த ஆண்டு – 11.02.1908
· ‘இறந்தும் இறவாமல் வாழும் தமிழ் மாணவர் ’ – ஜீ.யு.போப்
5. பாரதி தாசன்
· “கன்னல் பொருள் தரும் தமிழே ! நீ ஒரு பூக்காடு” – எனப்பாடியவர் – பாரதிதாசன் .
· ‘உடல் மண்ணுக்கு , உயிர் தமிழுக்கு’ – பாரதிதாசன்
· 20-ம் நூற்றாண்டின் கவிதைவானில் ஒளிநிலவாய் பவனிவந்த பெருங்கவிஞர் – பாரதிதாசன் .
· ‘அறியாமை இருளில் முடங்கி கிடந்த கருத்து குருடர்களை பகுத்தறிவு ஒளிபெற்று விழிப்புறச்செய்தவர்’ – பாரதிதாசன் .
· ‘கொள்கையற்ற கூனர்களை கொள்கை உரம்பெற்று நிமிர்ந்து நிற்க செய்தவர்’ – பாரதிதாசன் .
· ‘வீடெல்லாம் நாடெல்லாம் மக்களின் இதயக்கூடெல்லாம் இன்பத்தமிழ் மணக்கவேண்டும்’ – பாரதிதாசன் .
· ‘சூரியஒளிபெறாத செடியும் , பகுத்தறிவு ஒளிபெறாத சமூகமும் வளர்ச்சி அடையாது ’ என்றவர் – பாரதிதாசன்
· ‘தமிழுக்கு அமிழ்தென்று பேர்’ – பாரதிதாசன்
· ‘இருட்டறையில் உள்ளதடா உலகம் ’ ‘புதியதோர் உலகு செய்வோம்’ – பாரதிதாசன் .
6. இனியவை நாற்பது
· ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்
· ஊர் – மதுரை
· காலம் – கி.பி. 2ம் நூற்றாண்டு
· ‘குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே ’ – இனியவை நாற்பது
· சலவர் – வஞ்சகர் , சுழறும் – பேசும் , குழவி – குழந்தை .
TNPSC || TN Text Books || 8th Text Book || Pallikalvi
7. அகரமுதலி வரலாறு
· தமிழ் அகரமுதலிகளுக்கு செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள்துறை நூல்கள் – நிகண்டுகள்
· நிகண்டுகளில் பழமையானது – சேந்தன் திவாகரம் .
· சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் – திவாகரர் .
· 25 நிகண்டுகளில் சிறப்பானது – சூடாமணி நிகண்டு
· சூடாமணி நிகண்டின் ஆசிரியர் – மண்டல புருடர் .
· ‘அகராதி’ எனும் சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் – திருமந்திரம்
· ‘அகரமுதலி’கள் தோன்ற திருப்புமுனை – அகராதி நிகண்டு
· தமிழில் தோன்றிய முதல் அகராதி - சதுரகராதி
· சதுரகராதி எழுதியவர் – வீரமாமுனிவர் , 1732 ஆம் ஆண்டு
· வீரமாமுனிவர் எழுதிய அகராதிகள் மொத்தம் – 5
1. தமிழ் – லத்தின்
2. தமிழ் – பிரெஞ்ச்
3. லத்தின் – தமிழ்
4. பிரெஞ்ச் – தமிழ்
5. போர்த்துகீசு – தமிழ்
· தமிழ் – தமிழ் அகராதியைமுதன்முதலில் எழுதியவர்கள் – லெவி ,ஸ்பாஸ்டிஸ் .
· தமிழ் சொல்லகராதியை முதன்முதலில் இயற்றியவர் – யாழ்ப்பாணம் கதிரைவேலனார் .
· தமிழ் பேரகராதியை எழுதியவர் – குப்புசாமி
· படங்களுடன் கூடிய அகராதியை முதன்முதலில் வெளியிட்டவர் – ராமநாதன் .
· தற்காலத்தமிழ் சொல்லகராத்தியை வெளியிட்டவர் – பவானந்தர் (1925)
· முதன்முதலில் தமிழ் – ஆங்கிலம் பேரகராதியை உருவாக்கியவர் – வின்சுலோ
· 1985 – ல் தமிழ் – தமிழ் அகரமுதலியைத் தந்தவர் – மு. சண்முகம்
· 20 – ஆம் நூற்றாண்டின் பெரிய அகரமுதலி – தமிழ் லெக்சிகன் (சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட இந்த அகரமுதலி 6 தொகுதிகளை உடையது .)
· 1985 , தேவநேயப்பாவணரின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதியின் முதல் தொகுதி வெளிவந்தது .1993 – 2 ஆம் தொகுதி .
· படங்களுடன் வெளிவந்த இரண்டாம் பேரகராதி – செந்தமிழ் சொற்பிறப்பியல் 2ஆம் தொகுதி .
· முழுமையான கணினி உதவியுடன் உருவாக்கப்பட்ட தமிழ்அகராதி – கிரியாவின் தற்கால தமிழ் அகராதி . (விளக்கச்சொற்பொருளுடன் வந்த முதல் அகராதி)
· தமிழ் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி – அபிதானகோஷம் .
· இலக்கிய , புராண, இதிகாச செய்திகளைக்கொண்டு இலக்கிய களஞ்சியமாகத்திகழ்வது – அபிதானகோஷம் (1902).
· இலக்கியச்செய்திகளோடு , அறிவியல் துறைப்பொருட்களும் முதன்முதலாக சேர்ந்து விளக்கம் தந்த கலைக்களஞ்சியம் – அபிதான சிந்தாமணி .
· அபிதான சிந்தாமணியைத்தொகுத்தவர் – சிங்காரவேலனார் , 1934 .
· அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலியை வெளியிட்டவர் – மணவை முஸ்தபா , 1991 .
· ‘அகரமுதலி ஒன்றை படித்து வருவாய்
நிகரில்லா சொல் ஒன்றை நினைவில் கொள்வாய்’ – எனப்பாடியவர் – பாரதிதாசன் .
10. திருவள்ளுவ மாலை
· நெல்குத்தும்போது பெண்களால் பாடப்படும் பாட்டின் பெயர் – வள்ளை .
· அளகு – கோழி
· ‘திணையளவு போதா சிறுபுல்நீர்’ எனப்பாடியவர் – கபிலர் (திரவள்ளுவ மாலையில் 3வது பாடல்)
· இப்பாடலில் அறிவியல் அணுகுமுறை உள்ளது .
11. நளவெண்பா
· ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
· ஊர் – பொன்விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
· காலம் – 12 ம் நூற்றாண்டு
· இவர் வரகுணப்பாண்டியனிடம் அவைப்புலவராய் இருந்தார் .
· இவரை ஆதரித்த வள்ளல் – சந்திரன் சுவர்க்கி .
· ‘வெண்பாவிற்கு புகழேந்தி’ எனப்போற்றப்படுபவர் –புகழேந்திப்புலவர் .
· நளவெண்பா – 3 காண்டம் , 431 வெண்பாக்களை கொண்டது .
1. சுயம்வரகாண்டம்
2. கலிதொடர் காண்டம்
3. கலிநீக்கு காண்டம்
· நிடத நாட்டு மன்னன் நளன் , விதர்ப்ப நாட்டு இளவரசி – தமயந்தி
· ஆழி- கடல் , விசும்பு – வானம் , செற்றான் – வென்றான் , பிள்ளைக்குருகு – நாரை , வள்ளை – ஒருவகை நீர்ச்செடி , வௌவி – கவ்வி , திரை – அலை , மேதி – எருமை , புள் – அன்னம் , சேடி – தோழி , கடிமாலை – பனைமாலை , சூழ்விதி – நல்வினை , தார் – மாலை , காசினி – நிலம் , வௌகி – நானி , ஒண்தாரை – ஒளிமிக்கமாலை , மல்லல் – வளம் , மடநாகு – இளம்பசு ,மழவிடை – இளம்காளை , மறுகு – அரசவதி .
12. உலகம் உள்ளங்கையில்
· 20-ம் நூற்றாண்டின் பெரும் கண்டுபிடிப்பு – கணினி
· கணினியைக்கண்டுபிடித்தவர் – சார்லஸ் பாபேஜ் (1833)
· கணினி உருவாக காரணம் மணிச்சட்டம் .
· கணக்கிடும் கருவியைக்கண்டறிந்தவர் – ப்ளேஸ் பாஸ்கல் (பாரிசு)
· கணினியின் முதல்செயல்திட்ட வரைவாளர் – லவ்வேஸ் .
· ஹோவர்டு ஜோகன் கண்டறிந்த எண்ணிலக்க கருவி – ஹார்வார்டு மார்க் 1 .
· இனையம் எனும் வடிவத்திற்கு வித்தட்டவர் – ஜான் பாஸ்டல் (1960 , அமெரிக்கா )
· 1989 ல் , www எனப்பெயர் வைத்த ஸ்விஸ்நாட்டு இயற்பியல் அறிஞர் – பிம்பர்னலி .
· www – என்றால் – வையக வலை விரிப்பு .
· ‘கடந்த 20 ஆண்டு கனிணிப்பயணத்தில் இணையத்தின் பங்குமிகச்சிறப்பானது ‘ என்று கூறியவர் – பில்கேட்ஸ்
16. பாரதத்தாய்
· ‘வந்தே மாதரம் ’ பாடலை இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
· ‘வந்தே மாதரம் ’ இடம்பெறும் நூல் – ஆனந்த மடம் .
· திரு.வி.க - வால் ‘தற்கால ஔவை ’ எனப்பாராட்டப்பட்டவர் – அசலாம்பிகை அம்மை
· அசலாம்பிகை அம்மை இயற்றிய நூல்கள் –
1. ஆத்திச்சூடி வெண்பா
2. திலகர் புராணம்
3. குழந்தை சுவாமிகள் பதிகம்
4. ராமலிங்கசுவாமிகள் சரிதம்
5. காந்தி புராணம் .
17.இந்திய விடுதலைப்போரில் தமிழ்ப்பெண்மணிகள்
· ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி - வேலுநாச்சியார் .
· வேலுநாச்சியாரின் பெற்றோர் – செல்லமுத்து சேதுபதி , சக்கந்தி
· கணவர் – சிவகங்கை முத்துவடுகநாதர்
· 1780-ல் ஐதர் அலியுடன் இணைந்து சிவகங்கையை மீட்டார் .
· அஞ்சலையம்மாள் , கடலூர் முதுநகரில் 1890 – ல் பிறந்தார் .
· ‘குடும்ப சொத்தையும் குடியிருந்த வீட்டையும் போராட்டத்திற்காக விற்றவர் ’ – அஞ்சலையம்மாள் .
· அஞ்சலையம்மாளின் மகள் – அம்மாக்கண்ணு ,
· அம்மாக்கண்ணிற்கு காந்தியடிகள் இட்ட பெயர் – லீலாவதி .
· வை.மு.கோதைநாயகி , ருக்மணி , லட்சுமிபதி முதலிய நண்பிகளோடு இணைந்து பெண்ணடிமைக்கு எதிராய் குரல் கொடுத்தவர் – அம்புஜத்தம்மாள் .
· ‘சிறையிலிருந்போது மனம்தளராது , தான் கற்ற மொழிகளை பிறருக்கு கற்றுக்கொடுத்தவர் ’ – அம்புஜத்தம்மாள் .
· ‘காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்’ – அம்புஜத்தம்மாள் .
· ‘தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து அம்புஜத்தம்மாள் நிறுவிய தொண்டு நிறுவனம் ’ – சீனிவாச காந்தி நிலையம் .
· ‘நான் கண்டபாரதம் ’ எனும் நூலை எழுதியவர் – அம்புஜத்தம்மாள்
· ‘பெற்றதாயும் பொன்னாடும்
நன்னிலவானினும் நனிசிறந்தனவே’ – பாரதியார் .
20 . காவடிச்சிந்து
· காவடிச்சிந்தின் ஆசிரியர் – அண்ணாமலையார்
· இவர் சென்னிக்குளம் , திருநெல்வேலியில் 1861 –ல் பிறந்தார் .
· இவர் எழுதிய நூல்கள்
1. காவடிச்சிந்து
2. வீரை அந்தாதி
3. கோமதி அந்தாதி
4. வீரைப்பிள்ளைத்தமிழ்
· கலாபம் – தோகை , விவேகன் – ஞானி , வாவி – பொய்கை
21.விக்கிரமச்சோழன் உலா
· ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
· சோழ அரசரால் கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டவர் – ஒட்டக்கூத்தர்
· வேறுநூல்கள் –
1. மூவருலா
2. தக்கையாகுப்பரணி
· விக்கரமச்சோழனின் தலைநகரம் – கங்கை கொண்ட சோழபுரம்
· ‘குடகுமலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத்தந்தவன் ’ – காவேரன் .
· 96 விழுப்புண் பெற்ற சோழன் – விசயாலயன்
· ‘தில்லைக்கு பொன்வேய்ந்தவன் ’ – முதலாம் பராந்தகன்
· ’48 சிற்றூர் , மலைநாடு வென்றவன் ’ – முதலாம் ராசராசன் .
· ‘கடாரம் கொண்டான் , சேர கப்பற்படையை முழுமையையும் அழித்தவன் ’ – ராசேந்திரன் .
· சாளுக்கியரின் தலைநகரமான கல்யாணபுரத்தின் மீது படையெடுத்து 3 முறை போரிட்டு வென்றவன் – ராசாதி ராசன் .
· ஆயிரம் யானைகளை கொப்பத்துப்போரில் வென்றவன் – ராசேந்திரன் .
· மணிகளால் பாம்பணை அமைத்த சோழன் – ராசமகேந்திரன் .
· மலரின் 7 வகைப்பருவம்
1. அரும்பு
2. மொட்டு
3. முகை
4. மலர்
5. அலர்
6. வீ
7. செம்மல்
TNPSC || TN Text Books || 8th Text Book || Pallikalvi
22. செய்தி உருவாகும் வரலாறு
· BULLET IN – சிறப்பு செய்தி இதழ்
· EDITTORIAL – தலையங்கம்
· FLASH NEWS – சிறப்புச்செய்தி
· GREEN PROOF – திருத்தப்படாத அச்சுப்படி
· DEAD LINE – குறித்த காலம்
· FAKE NEWS – பொய்ச்செய்தி
· FOLIO NUMBER – இதழ் எண்
· LAY OUT – செய்தித்தாள் வடிவமைப்பு
26. திருமந்திரம்
· தமிழர் வேதம் என்றழைக்கப்படும் நூல் – திருமந்திரம்
· ஆசிரியர் – திருமூலர்
· காலம் – 5 ம் நூற்றாண்டின் பிற்பகுதி
· திருமந்திரம் , சைவத்திருமுறைகளில் 10 வதாக உள்ளது
· இது 3000 பாடல்களை உடையது
· ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் ’ என்று பாடியவர் – திருமூலர்
27. தேம்பாவணி
· முகை – மொட்டு
· மேனி – உடல்
· தேம்பாவணியின் ஆசிரியர் – வீரமாமுனிவர் (கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி)
· பெற்றோர் – கொண்டல் போபெஸ்கி , எலிசபெத் .
· ஊர் – காஸ்திக்கிளியோன் , இத்தாலி .
· வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் – சுப்ரதீபக்கவிராயர் .
· வீரமாமுனிவர் இயற்றிய நூல்கள் – ஞானோபதேசம் , பரமானந்த குரு கதை, சதுரகராதி , திருக்காவலூர் கலம்பகம் , தொன்னூல் விளக்கம் .
· தேம்பாவணி 3 காண்டங்கள் , 36 படலம் , 36155 பாடல்களை உடையது .
27 . நாடகக்கலை
· நாடகம் – நாடு + அகம்
· நாடகத்தின் வேறுபெயர் – கூத்துக்கலை .
· ‘தமிழின் தொன்மையான கலைவடிவம் ’ – நாடகக்கலை .
· நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பிய இயல் – மெய்ப்பாட்டியல் .
· ‘கூத்தாட்டவை குழாத்தன்றே’ – நாடக செய்தியைக்கூறும் திருக்குறள் .
· ‘நாடகக்கலை , காட்சித்திரைகள் , நாடக அரங்கின் அமைப்பு பற்றி விரவாக கூறும் நூல் ’ – சிலப்பதிகாரம் .
· பரிதிமாற்கலைஞரின் நாடக இலக்கண நூல் – நாடகவியல்
· நாடகம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள்
1. சுவாமி விபுலானாந்தாவின் மதங்கசூளாமணி
2. மறைமலையடிகளின் சாகுந்தலம் .
· தொழில்முறை நாடக அரங்குகள் பற்றிய ஆராய்ச்சி நூல் – நாடகத்தமிழ் (ஆசிரியர் – பம்மல் சம்பந்தனார் )
· மத்தவிலாசம் எனும் நாடகநூலை எழுதியவர் – மகேந்திரவர்ம பல்லவர் .
· குறவஞ்சி நாடகம் தோன்றிய காலம் – நாயக்கர் காலம்
· ‘உழவர்களின் வாழ்க்கையைச்சித்தரிக்கும் நாடகம் ’ – பள்ளு .
· ‘நொண்டி நாடகம் ’ தோன்றிய காலம் – 17 ம் நூற்றாண்டின் பிற்பகுதி .
· கட்டியங்காரன் உரையாடல்களோடு , முழுதும் பாடல்களாக அமைந்த நாடகம் – ராமநாடகம் , நந்தனார் சரித்திரம் .
· ‘புராணக்கதை’களைமையமாக வைத்து நடத்தப்பட்ட நாடகவகை – தெருக்கூத்து .
· டம்பாச்சாரி விலாசம் எனும் நாடகநூலை எழுதியவர் – காசிவிஸ்வநாதர்
· மனோன்மனியம் எனும் நாடகநூலை எழுதியவர் – சுந்தரம்பிள்ளை .
· தமிழின் முதல் சமுதாய நாடகம் – கதரின் வெற்றி .
· ‘தமிழ்நாடக மறுமலர்ச்சியின் தந்தை’ – கந்தசாமி .
· ‘நாடக சாலையை ஒத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – கவிமணி .
TNPSC || TN Text Books || 8th Text Book || Pallikalvi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக